Monday, September 08, 2014
தமிழகத்தில் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் எண்ணமாகும். அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு எடுத்த முடிவை பின்பற்றி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கும் போது மீனவர்களை மட்டும் விடுவித்து விட்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கூடாது என்று சுப்பிரமணிய சுவாமி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
மீனவர் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் மீனவர்களுக்கு துரோகம் செய்யமாட்டார்கள். இது போன்ற கருத்துக்களை கூறும் சுப்பிரமணிய சுவாமியை பா.ஜ.க. கட்டுபடுத்த வேண்டும்.
மதம், இனம், மொழி, மாநிலம் கடந்து இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதற்கு காரணம், சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சி இருந்தது தான். காங்கிரஸ் மதச்சார்பின்மை கொள்கையை கடைபிடித்து வருகிறது. மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்க கூடாது.
உள்ளாட்சி தேர்தல் அறிவித்த விதமே பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் பெரும்பாலான கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
ஈரோடு::முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் எண்ணமாகும். அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு எடுத்த முடிவை பின்பற்றி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கும் போது மீனவர்களை மட்டும் விடுவித்து விட்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கூடாது என்று சுப்பிரமணிய சுவாமி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
மீனவர் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் மீனவர்களுக்கு துரோகம் செய்யமாட்டார்கள். இது போன்ற கருத்துக்களை கூறும் சுப்பிரமணிய சுவாமியை பா.ஜ.க. கட்டுபடுத்த வேண்டும்.
மதம், இனம், மொழி, மாநிலம் கடந்து இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதற்கு காரணம், சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சி இருந்தது தான். காங்கிரஸ் மதச்சார்பின்மை கொள்கையை கடைபிடித்து வருகிறது. மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்க கூடாது.
உள்ளாட்சி தேர்தல் அறிவித்த விதமே பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் பெரும்பாலான கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
No comments:
Post a Comment