Tuesday, September 16, 2014
சென்னை::சென்னை சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த புலிகளின் உறுப்பினரான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை என்ஐஏ போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் முக்கிய இடங்களை படம் பிடித்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அவன் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவனிடம் விசாரணை நடத்த ஒரு வாரம் காவலில் எடுக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அவனை 7 நாள் காவல் எடுப்பதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மனுதாக்கல் செய்தனர். அந்த மனு, நீதிபதி மோனி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்து அருண் செல்வராசன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அருண் செல்வராசனிடம் விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பிலும் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், என்ஐஏ விசாரணைக்கு எத்தனை நாட்கள் போலீஸ் காவல் வழங்குவது என்பது பற்றி நாளை முடிவு செய்து அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment