Saturday, September 13, 2014

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு

Saturday, September 13, 2014
இலங்கை::தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் (SASEAN) மாநாடு ஒன்றை நடத்த இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளது.
 
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக நடத்தப்படவுள்ள சீனா, ரஷ்யா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ள இந்த உயர் மட்ட கலந்துரையாடளுடனான மாநாடு எதிர் வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜனத் ஜயசூரிய தெரிவித்தார்.
 
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்குடன பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முழுமையான ஒத்துழைப்புடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தினால் முதற் தடவையாக இந்த மாநாட்டை அங்குரார்ப்பனம் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறவுள்ள மேற்படி சர்வதேச மாநாடு தொடர்பான் உத்தியோகபூர்வ இணைய தளம் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜனத் ஜயசூரியவினால் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும்
விளக்கமளிக்கையில் :-
 
நாடொன்றில் பாதுகாப்பு தெடர்பில் அச்சுறுத்தல் இல்லாதபட்சத்திலேயே பொருளாதாரத்துறையும் வளர்ச்சியடையும் அத்துடன் சமாதானத்தையும் ஸ்தீரத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் இன்றியiமாத ஒன்றாகும். அந்த அடிப்படையிலேயே ஒவ்வொரு நாட்டினதும் பாதுகாப்பு துறையில் உயர் பதவியை வகிக்கும் அந்த நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளை ஒன்றிணைத்து, பரஸபர புரித்துணர்வுகளுடன் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடனே இது போன்ற உயர் மட்ட கலந்துரையாடலுடனனான மாநாட்டை நடத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்வுடன் ஆலோசனையை பெற்றுக் கொண்டேன்.
 
இதற்கமைய தெற்காசியாவிலுள்ள 8 நாடுகள், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 10 நாடுகள் என்ற அடிப்படையில் 18 நாடுகளை உள்ளடக்கும் வகையில் (SASEAN) “சாசியன்” என்று பெயர் வைத்து மாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக பலமான நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பார்வையாளர் அந்தஸ்தை வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் அங்குரர்ப்பண வைபவம் இலங்கையில் நடாத்தப்படவுள்ளமை எமது தாய் நாட்டிற்கு சிறந்த நற்பெயரை மேலும் ஏற்படுத்தும். இந்த பிரயோசனமான அமர்வின் மூலம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு ஏற்படும்; சவால்களை அடையாளங்கண்டு புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க தேவையான தந்திரோபாயங்களை பெற்றுக் கொள்ளமுடியும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பிலும் இந்த மாநாட்டின் போது இரு தரப்பு சந்திப்புக்களை நடாத்தி கலந்துரையாட முடியும் என்றார்.
 
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் (SASEAN) அமர்வின் பங்கேற்புஇ சார்க் நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு (SASEAN) அங்கத்துவ நாடுகள் வரை விஸ்தரிக்கப்படுகின்றது. ரஷ்யா மற்றும் சீன குடியரசும் இதில் மேற்பார்வையாளர்களாக பங்குபெறுவர்.
 
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் (SASEAN) அமர்வின் நிகழ்ச்சி நிரல்கள். வலய மற்றும் வலயத்தோடு ஏற்றுக்கொள்கின்ற பாதுகாப்பு கொள்கைகள், வெளியாரோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்கள், (SASEAN) பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் மற்றும் (SASEAN) பாதுகாப்பு பிரதானிகளுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு உற்சாகம் ஊட்டுதல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பரந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நோக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
SASEAN பாதுகாப்பு பிரதானிகளின் அமர்வின் போது ஆசிய வலயத்தின் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை வளர்ககும் வழிமுறைகள் தொடர்பான மாநாடு (CICA) தொடர்பான அங்கத்துவ நாடுகளின் கொள்கைகள் பற்றிய ஆரம்ப வெளியீட்டை தொடர்பு படுத்திக்கொள்ளும். வலயத்தின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்குடன் காலத்திற்கு ஏற்ப (SASEAN) பாதுகாப்பு பிரதானிகளின் செயலமர்வு ஆசிய வலயத்தின் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை வளர்ககும் வழிமுறைகள் தொடர்பான மாநாடு (CICA) ஓர் உள்ளடங்களாக அமையுமென நம்பப்படுகிறது. அதன் மூலம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் செயலமர்வு (SASEAN) ஆசிய வலயத்தின் பரஸ்பர மற்றும் நம்பிக்கையை வளர்ககும் வழிமுறைகள் தொடர்பான மாநாடு (CICA) சகல நடவடிக்கைகளுக்கும் பெறுமதியும் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

இலங்கையில் நடைபெறும் ஆரம்ப அமர்வில் தீர்மாணிக்கப்படுவதற்கு அமைய குறிப்பிட்ட அமர்வு, (SASEAN) அங்கத்துவ நாடுகளின் பங்களிப்புடன் அந்தந்த நாடுகளில் நடாத்தப்படவுள்ளது. (SASEAN) பாதுகாப்பு பிரதானிகளின் அமர்வை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை பாதுகப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்துடன் இணைந்து செயலாளர் நாயகம் அலுவலகம் ஒன்றும் நிறுவப்படுவதோடு அதன் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் ஆரம்ப அமர்வின் போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment