Tuesday, September 30, 2014
சென்னை::தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள
ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தீர்ப்பு குறித்த வருத்தத்தையும் உணர்வுகளையும்
தெரிவிக்கும் வகையிலும் இன்று
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறது. இதில் திரையுலகின் அத்தனை அமைப்புகளும் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் திரையுலக கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்
திரைத்துறையினர் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் சினிமா
படக்காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதில் தமிழ் சினிமாவின் அனைத்து
அமைப்புகளும் பங்கேற்கின்றன. படப்பிடிப்புகளும் ரத்து சினிமா மற்றும்
தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர் அதிபர்களும்
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க
செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும்
நாளை திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும்,
தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இன்று
ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment