Sunday, September 28, 2014

புலிகளுக்கு முன்னால் கைகட்டி நின்றதை மறந்து விட்டார்கள்: காதோடு காதாக...!!

எங்கிருந்தோ வந்த படையினருக்கு காணி வழங்க சட்டத்தில் இடமில்லையாம். வட மாகாண முதல்வர் விக்கி ஐயா இப்படிக் கூறுகிறார். இந்தப் படையினர் மட்டும் இல்லாவிட்டால் ஐயா மட்டுமல்ல தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் எவருமே வடக்கில் இன்றிருப்பது போல சுதந்திரமாக நடமாடியிருக்க முடியாது. புலிகளுக்கு முன்னால் கைகட்டிக் கொண்டு நின்று அவர்கள் கூறுவதை செய்து கொண்டிருந்திருப்பார்கள். இந்த நிலையை ஏற்படுத்தித்தந்த அரசையும் படையினரையும் குறைத்து மதிப்பிடுவதும் விமர்சிப்பதும் ஆரோக்கியமானதல்ல.
* விழுந்தவன் மீசையில் மண் படாத கதை கூறி சமாளிப்பு
ஊவா தேர்தலில் தமிழ் மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் சரி சமமாக வாக்களித்துள்ளார்களாம்., கணக்குப் போட்டு சரியாகக் கூறியிருக்கிறார் மனோ ஐயா. அப்படியென்றால் ஐ.தே..க.வில் இன்னும் இரு தமிழர் வென்றிருக்க வேண்டுமே. தானும் ஐ.தே. கவிற்காக பிரசாரம் செய்தமையால் விழுந்தவன் மீசையில் மண் படாத இந்தக் கதை. ஏதோ வழமை போல அரசாங்கத்திற்கு ஒரு தமிழரும் வாக்களிக்கவில்லை என்று அறிக்கை விடாமல் விட்டதே பெரிய விடயம். ஐ.தே.க.வில் நிச்சயம் வெல்லுவார் என எதிர்பார்த்த ஒருவருக்கே ஐயா துணிந்து வேலை செய்தவராம். சோலையான் குடுமி சும்மா ஆடாதாம்.

No comments:

Post a Comment