Monday, September 08, 2014
ராமேஸ்வரம்::கச்சத்தீவு கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு பெரிய கப்பல், 3 சிறிய கன்போட் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதனால் மீனவர்கள் அவசர, அவசரமாக தங்களின் படகுகளை திருப்பி வேறு பகுதிக்கு செல்ல துவங்கினர். இதில் வேல்முருகன் என்பவரின் படகிலிருந்த மீனவர் ஞானப்பிரகாசம் தவறி, கடலில் விழுந்தார். உடன் இருந்த மீனவர்கள் சண்முகம், முருகன், தங்கச்சாமி ஆகியோர்ஞானப்பிரகாசை தேடி பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் நேற்று காலை கரை திரும்பினர்.
கடந்த ஆக.25ம் தேதி நெடுந்தீவு அருகே கடலில் படகு மூழ்கியதால் மாயமான 3 பாம்பன் மீனவர்களின் நிலை இன்றுவரை தெரியாத நிலையில், மேலும் ஒரு மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானது மீனவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான மீனவரை விரைந்து கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:
Post a Comment