Tuesday, September 02, 2014
இலங்கை::தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை::தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தெரிவுக்குழுவின் தலைவராக இருப்பவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா. அவரே இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். பாராளு மன்றத் தெரிவுக்குழு என்பது இந்நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட அங்கீகாரம் பெற்ற குழுவாகும். சகல கட்சிகளும் பங் கேற்கும் இந்தக் குழு பிரச்சினைகளை அலசி ஆராய்வதற்கான களமாக இருக்கும்.
இதில் பங்குபற்றுவதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தீர்வு யோசனையொன்றை தெரிவுக்குழுவில் பங்கு பற்றி முன்வைக்கலாம். தெரிவுக்குழுவில் பங்குபெறுவதற்கான தமிழ்க் கூட்டமைப்பின் தயக்கமும் பின்வாங்கலும் அவ்வளவு நியாய மானதாகத் தெரியவில்லை.
தமிழ்க் கூட்டமைப்பு இன்றைய சர்வதேச, உள்ளூர் அரசியல் யதார்த் தத்தை புரிந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வது தமிழர் பிரச்சி னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேலும் பின்னடிக்கும் செயலாக அமையுமென்பதை மறந்துவிடக்கூடாது. உள்நாட்டில் ஓர் அரசியல் தீர்வு காண்பதில் இருந்து விலகி சர்வதேசத்தை நம்பியிருக்கும் வரட்டுச் சிந்தனையிலேயே கூட்டமைப்பு தனது காய்நகர்த்தல்களை செய்கிறது.
இந்தியா சென்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்கள். சந்திப்பு திருப்திக ரமாக இருந்ததாக இறுதியில் அறிக்கைகளும் விட்டனர். அது வேறுகதை, என்றாலும் பிரதமர் மோடி கூட்டமைப்பிடம் தெரி வித்திருக்கும் கருத்து பிராந்திய அரசியலில் இந்தியாவின் நிலையை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
சகல தரப்பினரும் ஒன்றுகூடி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் இதுதான் மோடி கூட்டமைப்புக்குச் சொன்ன விடயம். சகலதரப்பு என்ற பதத்துக்குள் கூட்டமைப்பு அரசாங்கம் மற்றும் ஏனைய கட்சிகளும் அடங்கும். தமிழ்த் தலைமை அரசாங்கத் துடனும் பேசவேண்டும்.
அதேநேரம் பாராளுமன்றத் தெரிவுக்குழு விலும் பங்கேற்க வேண்டுமென்பதையே மோடியின் கூற்று புலப் படுத்துகின்றது. இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த கொங்கிரஸ் அர சாங்கமும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. மோடியின் அர சாங்கமும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வெளிநாட்டுக் கொள்கை மாறுவதில்லை. புதிய தலைமை மேலோட்டமாக ஏதும் செய்யலாமேயொழிய அடிப்படைக் கொள்கை மாற்றமடை வதில்லை. இதனை தமிழ்க் கூட்டமைப்பு நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் தேசியப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என்பதை மோடி தெளிவுபடுத்தியிருப்பது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லையென்பதைக் காட்டுகிறது.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பக்க விளைவான 13 ஆவது திருத் தத்திற்கு உட்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு. ஆனால் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவான மாகாண சபையை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுச் செயற்பட முடியாது என்று கூட்டமைப்பு அடம் பிடித்து நிற்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்று 13 ஆவது திருத்தத்திலிருந்து அரசியல் தீர்வுக்கான முயற்சி களை ஆரம்பிப்பதா? அல்லது இந்தியாவின் நிலைப்பாட்டை நிரா கரித்துச் சர்வதேச பக்கத்திற்குச் செல்வதா? என்பதையிட்டு கூட் டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
மோடியைச் சந்தித்ததன் பின்னர் கூட்டமைப்புக்கு இந்த தர்மசங்கட மான நிலை ஏற்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேசம் சர்வதேசம் என்ற மாயையை தமிழ்க்கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின் றது.
மாகாண சபையை எந்தவகையிலும் ஏற்க முடியாது எனக் கூறி சர்வதேசத்தின் நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத் தப் பார்க்கிறார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வில் எந்தவொரு நாடும் இதுவரை அக்கறை கொள்ளவில்லை என்பதே உண்மை யான நிலை. மாறாக இலங்கை மீது அழுத்தம் கொடுத்து இங்கு கால்பதிக்கவே சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன.
சுருங்கச் சொன்னால் தங்களது ஆதிக்கத்தை இலங்கையினுள் நிலைநாட்ட முயற்சிக்கின்றார்கள். சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்று தரும் என்று தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சுயமான தீர்வொன் றைத் தயாரிப்பதற்குத் தமிழ்க் கூட்டமைப்பு முன்வரவேண்டும்.
உண்மையில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு பொதியை கூட்டமைப்பு இன்னும் தயாரித்ததாகத் தெரியவில்லை. தீர்வுத் திட் டமொன்று தங்கள் கைவசம் இல்லாமல் எப்படி இவர்கள் அரசாங் கத்துடனோ அல்லது தெரிவுக் குழுவிலோ பேசுவது. இப்போது தான் தீர்வுத் திட்டத்துக்கான ஆலோசனைகளை மக்களிடமிருந்து தமிழ்க் கூட்டமைப்பு கோரியிருப்பதாக தெரியவருகிறது. ஆகவே இவர்கள் இன்னும் தயார் நிலையில் இல்லையென்பது தெளி வாகின்றது.
தீர்வு தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையே இன்று வரை கூட்டமைப்புக்குள் தொடர்கிறது. 5 கட்சிகளுக்குள்ளும் சரி யான கொள்கை முரண்பாடு இருக்கின்றன.
புலிகளின் தனிநாட்டு சிந்தனையிலிருந்து விடுபடாதவர்களும் ஒரே நேரத்தில் முழுமையான தீர்வைவலியுறுத்துபவர்களும் இழுபறியான நிலையில் இருக்கின்றார்கள். இதனாலேயே மக்கள் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள சர்வ தேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற புளூடாவை கூட்ட மைப்பு அவிழ்த்து விட்டிருக்கிறது.
எனவே உள்நாட்டிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யதார்த்த பூர்வமான அணுகு முறையை முன்னெடுப்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தேவை.
No comments:
Post a Comment