Tuesday, September 16, 2014
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச பிரசன்னத்துடன் மட்டுமே அரசாங்கத்துடன் பேச்சு என்று கூறிக்கொண்டு, அரசாங்கத்தை சர்வதேச சிக்கலுக்குள் உட்படுத்தவே முயற்சிக்கிறது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசியல் தீர்வுக்கான பேச்சு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடானது அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே நடைபெறவேண்டும என்பதாகும். இந்த எமது தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.
அந்த நிலைப்பாட்டை மாற்றும் எண்ணம் எமக்கு கிடையாது. எமது நிலைப்பாடு வெளிப்படையானது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வப்போது நிலைப்பாடுகளையும் தமது கூற்றுக்களையும் மாற்றிக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு கூட்டமைப்பு நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கின்றது என்பதற்காக அரசாங்கத்தினால் கொள்கைகளை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. சர்வதேச பிரசன்னத்துடன் மட்டுமே பேச்சு என்று கூறிக்கொண்டு கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது என்று எங்களுக்கு தெரியும்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச பிரசன்னத்துடன் மட்டுமே அராசங்கத்துடன் பேச்சு என்று கூறிக்கொண்டு அரசாங்கத்தை சிக்கலுக்குள் உட்படுத்தவே முயற்சிக்கின்றது. இதில் நேர்மையான நோக்கம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. அந்த சிக்கலில் சிக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றுவதன் மூலம் அவர்கள் தமது நோக்கமின்மையை வெளிப்படுத்துகின்றனர்.
கேள்வி: இவ்வாறு அரசாங்கம் கூறினால் இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடிக்குமே?
பதில்: அப்படியானால் அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீகள்?
கேள்வி: ஓரளவு விட்டுக்கொடுப்புடன் நகர்வுகளை முன்வைக்கலாமே
பதில்: யாருடன் விட்டுக்கொடுப்புக்களை செய்வது? சர்வதேச பிரசன்னத்துடன் மட்டுமே பேச்சு என்று கூறிக்கொண்டு அரசாங்கத்தை சர்வதேச சிக்கலில் சிக்கவைப்ப-தற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இந்த இடத்தில் நேர்மையான நோக்கம் இருப்ப-தாக எங்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் யாருடன் விட்டுக்கொடுப்பு என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகின்றதாக கூறுகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் மக்களின் தேவைக்காகவோ மக்களின் நிகழ்ச்சி நிரலுக்காகவோ செயற்படவில்லை.
மாறாக அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் தனிப்பட்ட நோக்கத்துக்காகவும் செயற்பட்டுவ ருகின்றனர். எனவே இவர்கள் தமது தேவைக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அரசாங்கம் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளாது.
No comments:
Post a Comment