Saturday, September 27, 2014

புலிகளின் தடை நியாயமானது - இந்தியா!

Saturday, September 27, 2014
சென்னை::இந்தியாவில் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளமையை நியாயப்படும் வகையிலான ஆவணங்களை இந்திய அரசாங்கம், இந்த தடை குறித்து ஆராயும் தீர்ப்பாயத்திடம் கையளித்துள்ளது.

 புலிகள் மீது இந்திய விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதி ஜீ.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த தீர்ப்பாயம் நேற்று சென்னையில் தமது அமர்வை நடத்தி இருந்தது.

இதன் போது இந்தியாவின் பிரதி மன்றாடியார் நாயகம், புலிகள் தடை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் முன்வைத்தார்.

கடந்த 2012ம் ஆண்டு மூன்று புலிகளின் உறுப்பினர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டமை, இந்த தடை நீடிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம்  புலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இயக்கம் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியது.

இதனை மறுத்துள்ள (புலி ஆதரவு பினாமி)  வை.கோ.  புலிகள் இலங்கையில் தமிழீழத்தை கேட்டார்களே தவிர, இந்தியாவில் ஒரு அங்குலத்தையேனும் கேட்டிருக்கவில்லை என்று கூறினார்.

இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் சென்னையில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment