Monday, September 29, 2014
இலங்கை::வடக்கு கிழக்கு மக்களுக்கு ஆலோசனைகளை
வழங்க இணை கூட்டுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென காணாமல் போனவர்கள்
தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இரண்டு மாகாணங்களிலும் கிரமமான முறையில் ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அமைச்சுக்கள் ஆலோசனை வழிகாட்டல் சேவைகளை வழங்கி வருகின்ற போதிலும், அவை கிரமப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய பயிற்சியின்றி ஆலோசனைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட அடிப்படையில் ஒர் பொறிமுறைமைக்கு ஏற்ற வகையில் ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தற்போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களை பெண்கள் வழிநடத்தி வருவதாகவும் இதனால் பாரியளவில் அவர்கள் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment