Tuesday, September 30, 2014
இலங்கை::(புலிகள் ஆதரவு) தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இரா. சம்பந்தன் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை::(புலிகள் ஆதரவு) தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இரா. சம்பந்தன் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை
தமிழரசுக் கட்சியின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் திருகோணமலை பொது
நூலக கேட்போர் கூடத்தில் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது இரா. சம்பந்தன் தலைமையில் 10 பேர்
கொண்ட உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டது.
இரா. சம்பந்தன்
தலைமையிலான இக்குழுவில் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி.
விக்னேஸ்வரன், கே. துரைராஜசிங்கம், பேராசிரியர் மு. சிற்றம்பலம், பொன்.
செல்வராஜா, சி. வி. கே. சிவஞானம், வட மாகாண அமைச்சர் எஸ். குருகுல ராஜா,
கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி, எம். ஏ. சுமந்திரன்
ஆகியோர் அடங்குகின்றனர்.
வவுனியாவில்
அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் 15ஆவது மாநாட்டின் போது
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆராய்ந்து அது குறித்து எதிர்காலத்தில்
சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கே
மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்
காலங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாகம் மற்றும் செயல்
திட்டங்கள் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்று நடாத்தும் அதிகாரங்களை
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அவரோடு
இணைந்த செயற்குழுவினரும் மேற்கொள்ளும் கடமைப்பாடு கொண்டவர்களாக இருக்க
புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசியல் உயர்மட்ட குழு சர்வதேச
ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை
முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரம் கொண்ட குழுவாக இக்குழு
செயற்படும்.
இதேவேளை இலங்கை
தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினர் எதிர்காலத்தில்
தமிழ்மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பிரச்சினைகளுக்கான பரிகாரத்தை
அடைவதற்கு வேண்டிய அறவழிப் போராட்டங்களை நியாயப்படுத்தவும்
அப்போராட்டங்களில் மக்களை கனதியாக ஈடுபடுத்தவும் வேண்டிய விளக்கங்களையும்
ஆலோசனைகளையும் மக்களுக்கு வழங்கும் முகமாக கிராமம் தேர்தல் தொகுதி
மாவட்டங்களில் கொண்டு செல்லும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது
புதிய செயற்குழுவின் அளிக்கப்பட்ட கடமைகளாக வகுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment