Sunday, September 21, 2014

காலி டச் வைத்தியசாலை கடைத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்!

     
     
     
     
Sunday, September 21, 2014
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகழ்பெற்ற காலி கோட்டையில் அமைந்துள்ள பதிதாக புனர் நிர்மானம் செய்யப்பட்ட டச் வைத்தியசாலை வணிக கட்டடத் தொகுதி நேற்று (செப்.20) திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இவ்வணிக கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றம் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடபய ராஜபக்ஷ அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
 
மேலும் இக்கட்டட புனர் நிர்மானப்பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதறக்கு பங்களிப்புச் செய்த அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களை பாராட்டும் முகமாக அவர்களுக்கு ஜனாதிபதி அவர்களால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாரம்பரிய கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் மேடையேறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
போர்த்துக்கேயர்களால் நிர்மானிக்கப்பட்டு ஒல்லாந்தர்களால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்ட இக்கட்டடமானது தற்பேது மீள நிர்மானிக்கப்பட்டு வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது அத்துடன் இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் உலக பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய கட்டங்களை மீள் நிரமானம் செய்யும் திட்டத்திறக்கு அமைய கொழும்பு கோட்டையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டச் வைத்தியசாலைக் கட்டடம் மீள் நிர்மானம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து இத்திட்டம் இலங்கை இராணுவத்தின் 10வது பொறியியல் படைப்பிரிவினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் இந்த வணிக கட்டடத் தொகுதியில் இரத்தினக்கல் மற்றும் நகை கடைகள், தேயிலை கடைகள், அரும் பொருட்கள் மற்றும் உணவு விடுதிகள், என்பன காணப்படுவதுடன் ஓய்வு நேரத்தை சிறப்பாக களிக்கூடிய மற்றும் உல்லாசப்பயணிகளை கவரும் ரமயமான இடமாக காணப்படுகிறது.
 
மேலும் இந்நிகழ்வில் காலி முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள், பாராளுமண்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர், காலி ஆளுனர் மற்றும் மேயர், பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ தளபதிகள், மாகாண சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர், கட்டிட கலைஞர்கள், சிரேஷ்ட அரச அலுவலர்கள், மற்றும் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment