Monday, September 08, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நிலைமையின்போது படைமுகாமாக படையினரால்
பயன்படுத்தப்பட்டுவந்த பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படையினரின் முகாமாக இருந்த பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண கட்டளை இடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் இருந்த பொதுமக்களின் காணியின் ஒரு பகுதி கையளிக்கப்பட்டது.
இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெல்லாவெளியில் அமைந்திருந்த படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment