Saturday, September 20, 2014
இலங்கை::இலங்கையில் கால் ஊன்றிய பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியதன் மூலம்,
பயங்கரவாதத்தை ஒடுக்கியதில் எங்களுக்கு பெருத்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
என்றும், ஆசிய பிராந்திய பகுதிகளில் இறையாண்மை காத்திட இலங்கை எந்தவொரு
உதவியை செய்யவும், எங்களின் அனுபவங்களை பகிரவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
ஆசிய அரசியல் கட்சிகள் பங்கேற்ற சர்வதேச 8வது மாநாடு கொழும்புவில்
துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ராஜபக்சே பேசுகையில், ஆசிய
அளவில் பயங்கரவாதம் பெரும் கேடு விளைவிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.
பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே நோக்கத்துடனே இருக்கின்றனர். அப்பாவி மக்களை
கொன்று குவிப்பது இவர்களின் இலக்காக உள்ளது. இது போன்ற பயங்கரவாத சக்திகளை
ஒழிப்பதில் இலங்கை தனது அனுபவத்தை பகிர தயாராக உள்ளது. பயங்கரவாதத்தை
தோற்கடித்தததில் பெரும் அனுபவம் பெற்றுள்ளோம். இதன் பிறகு இலங்கை பொருளாதார
வளர்ச்சி பெற்று நிமிர்ந்து நிற்கிறது .
இன்னும் இலங்கை மண்ணில் புலிகளின் பயங்கரவாத சக்திகள் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் கால்ஊன்ற நினைக்கின்றன. ஆனால் இது போன்ற தருணத்தில் அரசியில் கட்சியினர் வேறுபாடுகளை களைந்து ஒரணியில் நின்று போராட முன்வர வேண்டும். ஆசியாவை வளம் பெற செய்வதில் நாம் அனைவரும் ஒருசேர பங்கு பணி அவசியமாகிறது. நமது ஒற்றுமையை வலிறுத்தவவே நாம் இந்த முறை இம்மாநாட்டை கொழும்புவில் நடத்துகிறோம். போதை பொருள் கடத்தல், வன்செயல்கள் ஊக்குவிப்புக்கு ஆசியாவின் வெளிப்புறத்தில் இருந்தும் இலங்கைக்கு எதிரான சக்திகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று கூடியிருக்கும் மாநாடு அர்த்தமுள்ளதாக அமையட்டும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே பேசினார்.

No comments:
Post a Comment