Sunday, September 21, 2014

தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கூட்டமைப்பும் வட மாகாண சபையும்!

Sunday, September 21, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அக்கட்சியின் ஆளுகைக்குள் இருக்கும் வடக்கு மாகாண சபையும் தத்தமது எல்லையை மீறி செயற்படுவதுடன் எமது தாய் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் மத விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
இலங்கைக்குள் தீர்க்க வேண்டிய சகல பிரச்சினைகளையும் சர்வதேச மயப்படுத்துவதனால் அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவது மட்டுமன்றி மூவின மக்களையும் அழிக்கும் செயற்பாடாக அமையும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் காட்டி சர்வதேச செயற்பாடுகளைப் பலப் படுத்தும் தேசத் துரோ கிகளுக்கு இலங் கைக்குள் இடம்கொடுக் கக் கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
பெளத்த விவகா ரங்களுக்கான ஜனா திபதி ஆலோசகர் வண. கும்புறுகமுவே விஜித தேரர், இந்து விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள், முஸ்லிம் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் கலாநிதி ஹசன் மெளலானா ஆகியோரே மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
 
வடக்கு மாகாண சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது சுயநலத்திற்காகவும் அரசைப் பழிவாங்கும் நோக்கிலும் மத்திய அரசுடன் முரண்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசு நாட்டைக் காப்பாற்றி அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கு மாகாண முதல்வரும் அதனைப் பிளவுபடுத்தி சர்வதேசத்திடம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கவே முயற்சித்து வருகின்றனர்.
 
இவர்கள் யுத்தத்தால் துன்பப்பட்ட மக்களின் நிலைமைகளை மறந்து சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்காகச் செயற்படுகின்றனர். ஏனைய 8 மாகாண சபைகளும் அரசுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போதிலும் வடக்கு மாகாண சபை மாத்திரம் தமது பிரிவினையை வலுப்படுத்தி சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுகின்றது. இவ்வாறு செயற்படுவதனால் இலங்கையின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கு மாகாண முதல்வரும் தமது போக்கைக் கைவிட்டு அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு தொடர்பில் முயற்சிக்க வேண்டும். மூவின மக்களின் உரிமைகளை அனைவரும் இணைந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment