Monday, September 01, 2014
சென்னை: கருணாநிதி தலைமையில் சென்னையில் 3ம் தேதி டெசோ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இலங்கை தமிழர் சமஉரிமை கோரியும்,
தமிழக மீனவர்களை பாதுகாக்கக் கோரியும் இலங்கை ராணுவத்தால் பறிமுதல் செய்யப் பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரியும் டெசோ சார்பில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப. வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
No comments:
Post a Comment