Monday, September 08, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 27வது மாநாடு இன்று ஆரம்பமாகிறது.
இதன்
ஆரம்ப உரையில், புதிய மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சயீட்ல் அல்
ஹுசைன், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் அறிவிப்பினை
வெளியிடவுள்ளார்.
கு
கு
றிப்பாக இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு
இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோருவார் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம்
தொடர்பான விசாரணைகளின் இடைக்கால வாய்மூல அறிக்கையும் இந்த மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனிடயே, இலங்கையின் பிரதிநிதி ரவிநாத்
ஆரியசிங்கவும் இன்றைய தினம் இந்த மாநாட்டில் விசேட அறிக்கை ஒன்றை தாக்கல்
செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment