Friday, September 05, 2014
இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 23 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 23 இலங்கை மீனவர்களும் 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை - இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினரின் பிவிஸ்வாஸ்பீ என்ற கப்பலிலிருந்து இலங்கை கடற்படையினரின் எல் 820 என்ற கப்பலுக்கு இலங்கை மீனவர்கள் ஏற்றப்பட்டனர். இலங்கை கடலோர காவல் படையின் 48 ரக கப்பலும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அவர்களது 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்சி நாடா பகுதியில் வைத்து எல்லை தாண்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதானார்கள்.
No comments:
Post a Comment