Monday, September 8, 2014

யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் டிப்பர் எரிப்பு சம்பவம் : 13 பேர் கைது!

Monday, September 08, 2014
இலங்கை::யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை மோதி பலியாக்கிய, டிப்பர் ரக வாகனத்தை எரித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 13 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (08) தெரிவித்தனர்.
 
ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவத்தில் கசிந்திரன் சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அந்த வாகனத்தை பெண்ணின் உறவினர்கள், மற்றும் ஊரவர்களால் எரித்தனர்.
 
டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, டிப்பர் எரியூட்டுவதற்கு காரணமாகவிருந்த பெண்ணின் உறவினர்கள் 6 பேர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என மேலும் 7 பேர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை சரணடைந்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள். 
 
7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

No comments:

Post a Comment