Sunday, August 3, 2014

சர்வதேச நிபுணர் குழுவின் ஆலோசனைகளை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது: மக்ஸ்வல் பரணகம!

Sunday, August 03, 2014
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ள சர்வதேச நிபுணர் குழுவின் ஆலோசனைகளை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது என்று காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
 
காணாமல் போனவர்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியினால் மூன்று பேர் அடங்கிய வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவின் ஆலோசனை வழிகாட்டல்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது என பரணகம தெரிவித்துள்ளார்.
 
ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் நிபுணர் குழுவின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படும். நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் குழுவின் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment