Monday, August 25, 2014

பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது!

Monday, August 25, 2014
இலங்கை::ஊவா மாகாண சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி
பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 
தபால் மூலம் வாக்களிப்பதற்கு 30 ஆயிரத்து 656 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல்கள்
ஆணையாளர் ஏம் எம் மொஹமட் குறிப்பிட்டார்.
 
தபால்மூலம் வாக்களிப்பதற்கு 42 ஆயிரத்து 36 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், அவர்களில் 11,380பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
தபால்மூல வாக்களிப்பு தினமான செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத தபால்மூல
 
வாக்காளர்களுக்கு, செப்டம்பர் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் எம்.எம் மொஹமட் தெரிவிக்கின்றார்.
 
இதேவேளை, தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி பக்கெட்டுக்களை உரிய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன
தெரிவித்துள்ளார்.
 
வாக்களிப்பு தினமான செப்டம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னதாக உரிய திணைக்களங்களிடம் வாக்குச்சீட்டு பொதிகள் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment