Monday, August 25, 2014

மீண்டும் ஆயுத போராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருக்க வேண்டும் எனில் வடக்கு மாகாணத்திற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வழக்கப்பட கூடாது:எஸ்.பி திஸாநாயக்க !

Monday, August 25, 2014
இலங்கை::காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுள்ளை – பஸ்சர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பெற்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மீண்டும் ஆயுத போராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருக்க வேண்டும் எனில் வடக்கு மாகாணத்திற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வழக்கப்பட கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதன் மூலம் மீண்டும் ஆயுதப் போராட்டமொன்று வெடிக்கக வழியமைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக  புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பசறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் ஐரோப்பாவில் முழு அளவில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகள் இலங்கையில் மீள ஒருங்கிணைந்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வட மாகாணசபைக்கும் தேவையானதை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கக் கூடிய சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment