16th of August 2014
முல்லைத்தீவு, செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர் நேற்றைய முன் தினம் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம்.
முல்லைத்தீவு, செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர் நேற்றைய முன் தினம் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம்.
மேற்படி கிராமத்திலிருந்து கடந்த வைகாசி மாதம் 22ம் திகதி பிரசாத் அஜந்தா என்ற பெண் இராணுவத்தில் இணைந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் உண்டானதாக தெரிவித்திருக்கும் இராணுவத்தினர், பின்னர் இவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்திருந்ததாகவும், அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் நேற்றைய தினம் ஒட்டுசுட்டான்- செல்வபுரம் கிராமத்திலுள்ள அவருடைய கணவர் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இராணுவ மரியாதைகளுடன் செல்வபுரம் கிராமத்திற்கு அருகிலுள்ள செல்வபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
|





No comments:
Post a Comment