Tuesday, August 05, 2014
மருதானை கத்தோலிக்க தேவாலயமொன்றில் காணாமல் போனவர்களது குடும்ப
உறுப்பினர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்
அனைவரும் புலிகளின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு தரப்பினர்
குற்றம் சுமத்தியுள்ளனர்.
மருதானையில் நேற்றைய தினம் நடைபெற்ற
கூட்டத்திற்கு சிலரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில்
ராஜதந்திரிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பௌத்த பிக்குகள்
அடங்கிய குண்டர் குழுவொன்று கூட்டத்தை பலவந்தமாக நிறுத்த நடவடிக்கை
எடுத்திருந்தது.
இதேவேளை, கூட்டத்தில் பங்கேற்ற யுத்தத்தினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனைவருமே, புலிகளின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும், யுத்த காலத்தில் காணாமல் போனவர்களினது உறவினர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் அனைவரும் புலிகளின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்க்பபடுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறுவப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழுவிற்கு தேவையான சாட்சியங்களை திரட்டும் நோக்கிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வரும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை ஒழங்கு செய்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சில இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

No comments:
Post a Comment