Sunday, August 17, 2014

ஐ.நா விசாரணைகள் சுதந்திரமாக இருப்பதில்லை: இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டேஸ் கௌசல்!

News ServiceSunday, August 17, 2014
சிறுவர்களை யுத்தத்திற்கு பயன்படுத்தியது மற்றும் மனித கேடயங்களாக பயன்படுத்தியது போன்ற விடயங்களுக்கு கடுமையான தண்டனை கோருவேன் என்று காணமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்படவுள்ள இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டேஸ் கௌசல் தெரிவித்துள்ளார். சகலருடைய மனித உரிமையை எவ்வித முற்கற்பிதங்களுமின்றி நிலை நாட்டுவதற்காகவே ஐ.நா ஏற்படுத்தப்பட்டது. எனினும் சில வேளைகளில் ஐ.நா முன்னெடுக்கும் விசாரணைகள் சுதந்திரமாக இருப்பதில்லை, தனிப்பட்ட நலன்களை உள்ளடக்கியதாகவும் அவை காணப்படுகின்றன.
 
ஆகவே ஐ.நா விசாரணையொன்றை ஆரம்பித்தாலும் கூட அதற்கு புறம்பாக சுயாதீன விசாரணையொன்றை இலங்கை குறித்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச ஆலோசனைக்குழு மேற்கொள்ளும் யுத்த பொறுப்புக் கூறல் விசாரணை சுதந்திரமான பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறுவதை உறுதிசெய்யும். ஆலோசனை குழுவில் நான் பலவந்தமாக காணாமற் போகச் செய்யப்பட்டோர் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துவேன். சிறுவர்களை யுத்தத்திற்கு பயன்படுத்தியது மற்றும் மனித கேடயங்களாக பயன்படுத்தியது போன்ற விடயங்களுக்கு கடுமையான தண்டனை கோருவேன்.
 
இலங்கையில் நிலவிய சூழ்நிலை குறித்த முழுமையான அணுகுமுறையொன்றை அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் எடுக்க வேண்டும். அமெரிக்கா பொலிஸ்காரனாக செயற்படுவதை தவிர்க்க வேண்டும். பொது மக்கள், குழந்தைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை நாங்கள் மறக்க முடியாது. யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட முக்கிய நாடு அமெரிக்கா எனவும் அவ்டேஸ் கௌசல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment