Sunday, August 10, 2014
மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்று
ஞாயிற்றுக்கிழமை(10.08) காலை இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக
விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரனைகள் இடம் பெற்ற போது : புலிகளின்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சாட்சியம்
அழிக்க மறுத்து விட்டதோடு அறிக்கை சமர்ப்பித்தார்.
இன்று (10.08.14) ஞாயிற்றுக்கிழமை
மன்னார் நகர் பிரதேசச் செயலக கட்டிடத்தில் 3 ஆம் நாள் அமர்வு இடம் பெற்ற
போது காலை 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜேசேப்பு
ஆண்டகை மற்றும் அவருடன் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர்
சோசை அடிகளாரும் ஆணைக்குழுவின் முன் சமூகமளித்தனர்.
அந்நேரம் ஆயர் 7 பக்கங்கள் கொண்ட மகஜர் ஒன்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து அதனை ஆணைக்குழு முன் வாசித்துக்க்காட்டினார்.
இதில் இரண்டு பங்கங்கள்
ஆணைக்குழவிற்கு தெரிவிக்கும் கருத்துக்களையும், ஏனைய பக்கங்கள் ஏற்கனவே
ஜனாதிபதிக்கு அவரால் வழங்கப்பட்ட 14 அம்சக் கோரிக்கைகளையும் அடங்கிய
மகஜராகவே காணப்பட்டது.

No comments:
Post a Comment