Friday, August 15, 2014
சென்னை: நாடு முழுவதும் 68வது சுதந்திர தினவிழா, இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். சுதந்திர தினவிழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதாவை சென்னை கோட்டையில், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்று கொண்டார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் நின்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். பின்னர் கொத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வீரர்களுக்கு விருது வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.5 லட்சம் பரிசு மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம் கொண்டது. இவர் செங்கல்பட்டில் ஏஎஸ்பியாக இருந்த போது மணல் கொள்ளையை தடுத்தற்காக இந்த விருது வழங்கப்பட்டது. முதலமைச்சரின் நல்ஆளுமை விருது, தலைமைச் செயலக தகவல் தொழில் நுட்ப துறை பிரிவு அலுவலர் எஸ்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்று கொண்டார்.
மேலும், குக்கிராம அளவில் இணையதளம் வாயிலாக குடிநீர் விநியோகத்தை கண்காணித்தற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு விருது வழங்கப்பட்டது. விருதினை அத்துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்று கொண்டார். மாற்றுத்திறனாளிகளின் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழக அரசு விருது, சென்னையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனைக்கும், மகளிர் நலனுக்காக சிறப்பு தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமுக பணியாளர்களுக்கான விருது கும்மிடிபூண்டியில் உள்ள சேர் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது. விழாவில் மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment