Tuesday, July 22, 2014

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் புலிபயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியான சூழலை உருவாக்கியதற்காக ஜனாதிபதியை பாராட்டுகின்றோம்: சுப்பிரமணிய சுவாமி!

Tuesday, July 22, 2014
சென்னை::இலங்கை இந்திய உறவில் இருந்து தமிழ் நாட்டையும் தமிழர் விவகாரத்தையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனாதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் 'மோடியின் கீழ் இந்தியா' என்ற தொனிப் பொருளில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

தமிழ்நாட்டிலோ தமிழ்நாட்டு தேர்தல்களிலோ இலங்கைத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை. அவர்கள் தேர்தல்கள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் பணத்தையும் போதைப் பொருள் விற்ற பணத்தையும் தமிழ் நாட்டில் உள்ள சில குழுக்கள் பயன்படுத்துகின்றன. இந்த நிலை சினிமா உலகத்திலேயே மிக மோசமாக காணப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியான சூழலை உருவாக்கியதற்காக ஜனாதிபதியை பாராட்டுகின்றோம்.

நான் இங்கு கலந்துரையாடும் எந்த விடயமும் கட்சியின் அலுவலக முறைகளில் இருந்து கூறுபவையல்ல, எமது கட்சி எப்பாதையை நோக்கி போகின்றது என்ற என்னுடைய கருத்தும் உண்மைநிலையும் கட்சியின் கொள்கைகளுமாகும். தற்போது இந்தியா மோடியின் ஆட்சிக்கு கீழ் எவ்வாறான கொள்கைகளுடன் இயங்குகின்றது என்பதை தெளிவுபடுத்துவதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகிய பின்னர் உண்மையாகவே இந்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை முன்னுதாரணமாக கூறலாம். குறிப்பாக சமூக மாற்றங்கள். எமது முன்னாள் பிரதமர்களை போலல்லாது வறுமை நிலையை குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அவருக்கு அரசாங்கம் எனும் துறையில் நல்ல அனுபவம் உள்ளது. இதற்கு முன்பு வந்த எந்தவொரு பிரதமர்களுக்கும் இவரைப் போன்ற வாழ்க்கை பின்னணி இருக்காது.

தன்னுடைய தனிப்பட்ட கொள்கையின் மூலம் அரசாங்கத்தை கொண்டு செல்வது மட்டுமல்லாது தனது மனதில் சரியானதை முடிவெடுக்கின்றார். அதேபோல அவருடைய பதவியேற்பு தினத்தன்று சார்க் நாட்டு தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தது எமக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. இந்தியாவிற்கு இலங்கை ஜனாதிபதி வரக்கூடாது என்று இந்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. ஆசிய நாடுகளுக்கு முக்கித்துவம் கொடுத்தே சார்க் நாட்டுத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதலாவது விஜயமாக பூட்டானுக்கு சென்றார்.

அனைத்துக்கும் மேலாக இந்தியா வெளிநாட்டுக்கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இலங்கையில் காணப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் இந்திய அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுக்கும். அந்த வகையில் தற்போது பயங்கரவாதமற்ற இலங்கையை தந்த ஜனாதிபதியை நாம் பாராட்டுவது மட்டுமல்லாது இனிவரும் காலங்களிலும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தாமல் இருக்க மக்களாகிய நீங்களும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

தற்போது வடக்கில் உள்ள மாணவர்களோ வேலைக்க செல்பவர்களோ பயமின்றி இரவு நேரங்களில் கூட தைரியமாக வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. இனியும் இவ்வாறான பயங்கரவாத பிரச்சினைகள் ஏற்படுமாயின் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். முன்னொரு காலத்தில் நாம் பிரித்தானியர்களுக்கு அடிமையாகி இருந்ததை வரலாற்று புத்தகங்களை படித்தால் நன்றாகவே புரிந்துகொள்ளலாம். நாட்டில் இனப்பிரச்சினை இல்லாமல் நாட்டை பாதுகாத்து கொள்வது இலங்கை குடியுரிமை பெற்றவர்களான உங்களுக்கே முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment