Thursday, July 31, 2014

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மதிமுக.வினர்!

Thursday, July, 31, 2014
சென்னை::அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று மதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எச்.சீமாபஷீர்,.

வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எம்.இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஏ.மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எச்.எம்.முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்ட பிரதிநிதி எஸ்.எம்.ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா.துரைசாமி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment