Wednesday, June 4, 2014

யாழ். நகரத்தில் மீட்கப்பட்டது உளவு விமானமில்லை: சுகத் ஏக்கநாயக்க!

 Wednesday, June 04, 2014
இலங்கை::யாழ். நகரத்திலுள்ள விடுதி யொன்றின் கூரையி லிருந்து திங்கட்கிழமை (02) இரவு மீட்கப்பட்ட சிறிய ரக விமானம், உளவு விமானம் அல்ல எனவும் தொலைபேசி இணைப்பு நிறுவனம் ஒன்று தமது விற்பனை மேம்படுத்தல் செயற் பாட்டிற்காக பயன்படுத்திய விமானமே இது வெனவும் என யாழ். தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
 
குறித்த விமானத்தைப் பயன்படுத்துவதற்கான ஆவணம் அந்நிறுவனத்திடம் உள்ளதெனவும் இது தொடர்பில் ஏற்கெனவே அந்நிறுவனம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றிருந்ததாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
விற்பனை மேம்படுத்தல் செயற்பாட்டிற்கான திங்கட்கிழமை (02) மாலை விமானம் பறக்கவிடப்பட்டதாகவும், அதன் மின்கலம் செயலிழந்ததால் விடுதியின் கூரையின் மேல் வீழ்ந்ததாக அவர் கூறினார்.
 
இதன்படி பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த குறித்த தொலைபேசி இணைப்பு நிறுவன பிரதிநிதிகளிடம் அந்த சிறிய ரக விமானம் ஒப்படைக்கப் பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment