Saturday, June 28, 2014

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Saturday, June 28, 2014
இலங்கை::
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி உதவியில் இயங்கி வரும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கூடுமெனவும், தேர்தல்களை இலக்கு வைத்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தி;ற்கு பின்னர் இலங்கை மக்கள் பெரும் எண்ணிக்கையிலான தேர்தல்களில் வாக்களித்துள்ளதாகவும், தேர்தல் தொடர்பில் அமெரிக்கா இலங்கை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களில் பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களிடமிருந்து பணம் திரட்டி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா கருவியாக பயன்படுத்திக்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.அநேகமாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பாரியளவு பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புலிகளின் உத்தரவிற்கு அமைய மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காத போதிலும். 2001ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கை மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதி மூலங்கள் தொடர்பில் விசாரணை செய்வதாகவும் அதில் தவறில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment