Monday, June 30, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்
குழு தொடர்பில் ஆளும் கட்சியினர் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்த
உள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப்
பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும்
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த
சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
பேருவளை பென்தொட்டவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மதியம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடு எதிர்நோக்கி வரும் பல முக்கியமான தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் விசாரணைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியே இன்றைய சந்திப்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சந்திப்பில் பங்கேற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இரவுப் பொழுதை ஹோட்டலிலேயே கழிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய ரீதியான தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு தியதலாவையில் இவ்வாறான ஓர் சந்திப்பினை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment