Tuesday, June 24, 2014

நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

Tuesday, June 24, 2014
இலங்கை::நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 33 உயர் அதிகாரிகள்  (23) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து உரையாடினர்.
    
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வாங் யொங்சோங் தலைமையில் சீனாவின் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்குபற்றியுள்ளனர்.
 
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க உட்பட  இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இச்சந்திப்பில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு என்பன தொடர்பில் கலந்துரையாட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இக்குழுவினர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment