Tuesday, June 3, 2014

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா!

 புதுடெல்லி::பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்தார்.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 39 இடங்களில் தனியாக போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று மந்திரி சபை அமைத்தபிறகு, முதல் முறையாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமரை சந்திப்பதற்காக இன்று டெல்லி சென்றார்.

தனி விமானம் மூலம் டெல்லி சென்ற அவர்,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து இன்று மாலை டெல்லி உள்ள சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் , பிரதமர் நரேந்திர மோடியை  முதல்–அமைச்சர் ஜெயலலிதா  சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஜெயலலிதா விவாதித்தகாவும்,.தமிழகத்தின் நலன்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment