Sunday, June 01, 2014
நியூயார்க்::சமாதான நடவடிக்கையின் போது உயிரிழந்த 8 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 106 வீரர்களுக்கு ஐ.நா.வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையில், சர்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வி அனுசரிக்கப்பட்டது. அநிகழ்ச்சியில் ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலாளர் பெயரில் வழங்கப்படும் கௌரவமிக்க டாக் ஹமாஷெல்ட்
விருது.சமாதான நடவடிக்கையின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக, புதிதாக அமைக்கப் பட்டுள்ள நினைவுச் சின்னத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி, ஐ.நா. படைக்கு ராணுவப் பங்களிப்பு செய்யும் பிற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.நா.வின் இரண்டாவது பொதுச் செயலாளர் பெயரில் வழங்கப்படும் கௌரவமிக்க டாக் ஹமாஷெல்ட் விருது, அமைதிப் படை பணியில் இறந்த 106 வீரர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் இதனை பெற்றுக்கொண்டனர்.
இந்திய வீரர்கள் 8 பேருக்கான விருதை இந்தியப் பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி பெற்றுக் கொண்டார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களின் நினைவை போற்றும் வகையில், இந்தியாவின் முயற்சியின் பேரில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 106 வீரர் களின் புகைப்படங்களுடன் கூடிய நினைவுச் சின்னத்துக்கு அசோக் குமார் முகர்ஜியும் அஞ்சலி செலுத் தினார். மெழுகுவர்த்தி ஏற்றியும் நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. இதையடுத்து அசோக் குமார் முகர்ஜி பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், “உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுக ளில் அமைதிப் பணிக்காக செல்பவர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிக ரித்து வருவது வருத்தம் அளிக் கிறது. ஐ.நா. அமைதிப்படை வீரர்கள், உள்ளூர் அரசுக்கு ஆதரவாக, ஒருதலைப்பட்சமாக செயல்படுபவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார்கள். இதனால் அமைதிப்படை வீரர்களில் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது.
ஐ.நா. உறுப்பு நாடுகளில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையை அமைதிப்படை மூலம் சரிசெய்திட முடியாது. எனவே, அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment