Friday, June 20, 2014
Friday, June 20, 2014
பாக்தாத்::ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக சுமார் 100 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்
வடக்கு பகுதியில் உள்ள மொசூல் நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40
இந்திய தொழிலாளர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட 40 பேரில் 22 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். 16 பேர்
அரியானாவையும், 2 பேர் இமாசல பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
40
தொழிலாளர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க மத்திய அரசு தீவிர
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. முதல் 2 நாட்கள் 40 தொழிலாளர்களும் எங்கு
இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்பதே தெரியாமல் இருந்தது.
நேற்று
40 தொழிலாளர்களும் இருக்கும் இடம் தெரிய வந்தது. மொசூல் புறநகரில் உள்ள
பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் 40 தொழிலாளர்களும் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை மீட்க ஈராக் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியபடி உள்ளனர்.
இந்த
நிலையில் கடத்தப்பட்ட 40 இந்திய தொழிலாளர்களில் ஒருவர் தீவிரவாதிகளிடம்
இருந்து தப்பி வந்து விட்டது தெரிய வந்துள்ளது. அவர் ஈராக்கின் வடக்குப்
பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்பில் நகரில் ஒரு முகாமில்
இருப்பதாக தெரிகிறது.
அந்த இந்திய தொழிலாளி பத்திரமாக இருப்பதாக
ஈராக் செம்பிறை சங்க தலைவர் டாக்டர் யாசீன் அப்பாஸ் தெரிவித்தார். தப்பி
வந்துவிட்ட இந்திய தொழிலாளிக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக
அவர் உறுதிபடுத்தினார்.
ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு
தொழிலாளி மட்டும் தப்பி வந்து இருப்பது மத்திய வெளியுறவு துறை
அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அந்த தொழிலாளியுடன்
நேற்று போனில் பேசினார்கள்.
இதற்கிடையே செம்பிறை சங்க மூத்த
உறுப்பினர் ஒருவர் கிர்பில் நகருக்கு விரைந்துள்ளார். அங்கு அவர் தப்பி
வந்த தொழிலாளியை சந்தித்து பேச உள்ளார்.
இதன் மூலம் கடத்தப்பட்ட
மற்ற 39 தொழிலாளர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிய வரும். அவர்களை
மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment