Monday, 26, May, 2014
புதுடில்லி::இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு இதுவரை காணாத புதிய உச்சத்தை அடைவதற்கான பயணத்திற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
அதற்காக நாட்டு மக்களின் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். வலிமையான, வளர்ச்சியுடைய மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கும் நமது கனவை நனவாக்க ஒன்றுபடுவோம் என்று தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் சார்பில் துவங்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment