Saturday, May 3, 2014

விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாய்கள் உட்பட ஐவர் காயம்!

Saturday, May 03, 2014
இலங்கை::
விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாய்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை காலி - எல்பிட்டியவின் நவதகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
 
விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றிருந்த சிப்பாய்கள் நடத்திய விருந்துபசார நிகழ்விலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் விருந்தை நடத்திய மூன்று சிப்பாய்களுடன் அங்கிருந்த இருவரும் காயமடைந்தனர்.
 
காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது கண்டறியப்படவில்லை. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment