Friday, May 30, 2014
இலங்கை::வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் இன்று காலை விழிப் புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
இன்று காலை 9.30 மணியளவில் தபால் நிலையச் சந்தியிலிருந்து ஊர்வல மாகப் புறப்பட்ட ஊழியர்கள்,சத்திர சந்தியூடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து வாக்காளர் பதிவை தூண்டும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக் கப்பட்டன.
பேரணியின் போது வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டியதன் அவசிய த்தை உள்ளடக்கிய வாசகங்கள் காட்சிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment