Friday, May 30, 2014
இலங்கை::யாழ். சாவற்கட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் டைனமைற் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் மீன்களை குளிர்பதனிட்டுக் கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் பெருமளவு மீன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குடாநாட்டில் அதிகரித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்த்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மேற்படி கைது சம்பவம் இம்பெற்றுள்ளது.
மேற்படி சட்டவிரோத மீன்பிடியில் பிடிக்கப்பட்ட 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியானவை என யாழ்.கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவிற்கமை ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாவாந்துறை, கொட்டடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் மீட்டுள்ளது.
நாவாந்துறை பகுதியில் 3 தொகுதி வலைகளும், கொட்டடி பகுதியில் ஒரு தொகுதி வலையும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட வலைகள் இதுவரையில் உரிமை கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட வலைகள் நிதீமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. நீதிமன்றின் உத்தரவிற்கமைய அடுத்தகட்ட நவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment