இலங்கை::படைவீரர் மாதத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் முப்படை மற்றும் பொலிஸாரின் 50 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் தொகை வழங்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் (மே 29) காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டதுடன் முப்படைகளின் தளபதிகளும் இணைந்து இந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை வழங்கி வைத்தனர்.
படைவீரர்களின் குடும்ப நல வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் எதிர் காலத்தை பொறுப்பேற்கவுள்ள முப்படை மற்றும் பொலிஸாரின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான அனுசரணையூடனும் அலவ்வ இலங்கை வங்கி, சேமகே சமூக வியாபாரம் மற்றும் டிமோ நிறுவனங்களின் இணை அனுசரணைகளுடன் மாணவ, மாணவி ஒருவருக்கு தலா 24 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் ரூபா பன்னிரெண்டு இலட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் தொகை 50 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கஇ விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க ஆகியோர் உயர் தரத்தில் கல்வி கற்கும் படைவீரர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டை கருத்திற் கொண்டு புலமைப்பரிசில் தொகை வழங்கியது.
இந்த நிகழ்வில் முப்படை மற்றும் பொலிஸ் நலன்புரி சங்கத்தின் பணிப்பாளர் மல்காந்தி ஜயவர்தன, அதன் திட்டப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் வசந்த குமார, தேசிய சேமிப் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் கமநாயக்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் உப தலைவரும் அமைச்சின் மேலதிக செயலாளருமான இந்து ரத்நாயக்க, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டபிள்யூ. எம். சி. ரணவன உட்பட முப்படைகளின் நலன்புரி பிரிவுகளின் பணிப்பாளர் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
No comments:
Post a Comment