Thursday, May 1, 2014

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் மே தின ஊர்வலம்!.

P1240508
P1240513


Thursday,May01,2014
இலங்கை::அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மே தின ஊர்வலம் இன்று காலை கல்முனை நகரில் இடம்பெற்றது.
அகில இலங்கை பொது ஊழியர் சங்கம்த்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி எஸ்.ராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பெரும் திரளான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தைத் தொடர்ந்து மே தின பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.  

No comments:

Post a Comment