Friday, May 30, 2014
இலங்கை::இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும்
தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்
தோற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவ மாணவிகள் அடையாள அட்டைகளை கோரி
விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட காலம்
இந்த மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மாணவர்களிடம் இருந்து மேலும் 4
லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்படுகிறது.
ஒக்டோபர் 31 ஆம் திகதி பிறந்த 16 வயது பூர்த்தியாகும் மாணவர்களுக்கு
தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கும் குறைந்த
வயதுடைய மாணவர்கள் அஞ்சல் அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் என்றார்.
மேலும், 2016 ஆண்டு முதல் இலத்திரணியல் அடையாள அட்டை பாவனைக்கு
வருவதுடன் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அடையாள அட்டை இரத்துச்
செய்யப்படுவதுடன் 15வயது பூர்த்தியானவர்கள் முதல் அனைவருக்கும்
இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment