Friday, May 30, 2014

1350 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்பு!



Friday, May 30, 2014இலங்கை::உள்ளுர் விமான சேவைகளை விருத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு விமான நிலைய ஓடு பாதை, பிரயாணிகளுக்கான வசதி மண்டபம் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளை சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்க ஜயரட்ன இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
1350 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவில், 4800 அடி நீலமும், 45 மீற்றர் அகலமும் உடையதாக மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு பாதை அமையும்.

புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட அமைச்சர் பிரியங்க ஜயரட்ன அதிகாரிகளுடன் இந்த விமான நிலையத்தின் புனரமைப்பு வேலைகள் பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடினார்.

இதன்போது, சிவில் விமானசேவைகள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரொஹான்தலுவத்த, சிவில் விமானசேவைகள் பிரதம பணிப்பாளர் எச்.எம்.சி.நிமால் சிறி, கட்டுநாயக்காக விமானநலைய பிரதித்தலைவர் கமல் ரத்வத்த, கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெட்ணம், உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடு பாதை விஸ்த்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதுடன் பிரயாணிகளுக்கு வசதியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பிரயாணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகா ரசபையுடன் இணைந்து விமான சேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1350 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன்  புனரமைப்பு பணிகளை அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த 2013 செப்ரம்பரில் ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment