Sunday, May 4, 2014

கடலில் தாக்குதல் பிரச்னை தமிழக - இலங்கை மீனவர்கள் 12ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Sunday, May, 04, 2014
இலங்கை::
தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையில் வரும் 12ம் தேதி கொழும்புவில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. அவர்களின் வலைகள், படகுகள் சேதப்படுத்தப்பட்டு, மீன்கள் பறித்து செல்லப்படுகின்றன. அவர்கள் எல்லை தாண்டி வருவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று இலங்கை கடற்படை கூறி வருகிறது. இதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடல் எல்லைக்குள் வரும் போது, இந்திய கடற்படையால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த இருநாட்டு மீனவர்களும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடங்கியது.

தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் சுசித்திரா துரை, இலங்கை அரசின் சார்பில் மீன்வள துறை நிர்வாக இயக்குனர் நிமல் இட்டையார்சிசை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், சிறை பிடிக்கப்படும் மீனவர்களை உடனுக்குடன் பேச்சு நடத்தி விடுவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கொழும்புவில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண இருதரப்பு மீனவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன்படி மார்ச் 13ம் தேதி கொழும்புவில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், மார்ச் 25ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மார்ச் 25ல் பேச்சு வார்த்தை நடக்கவில்லை.

இந்நிலையில், வரும் 12ம் தேதி கொழும்புவில் இலங்கை - தமிழக மீனவர்களுக்கு இடையில் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை மீன்வளத் துறை நிர்வாக இயக்குனர் நிமல் கூறுகையில், Ôவரும் 12ம் தேதி இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒரு நாள் நடைபெறும். இதில் இந்திய மீனவர்கள் 26 பேர், 20 இலங்கை மீனவர்கள் பங்கேற்கின்றனர். தவிர இரு நாட்டு அரசு சார்பில் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்Õ என்றார்
.

No comments:

Post a Comment