Saturday, May 03, 2014
இலங்கை::இலங்கை - இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான இரண்டாங்கட்டப் பேச்சு எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை::இலங்கை - இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான இரண்டாங்கட்டப் பேச்சு எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருநாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சு நடத்த தமது அமைச்சு திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜாக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி இரண்டாங்கட்ட பேச்சு நடைபெறவுள்ளது. இந்தப் பேச்சுக்கு பின்னர் இரு நாட்டு அமைச்சுக்களிடையே 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசேட குழு எப்போது சந்தித்து பேசும் என்பது குறித்து இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை.
எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டத்துக்குச் சென்னையில் இருந்து 28 பேர் கொண்ட குழுவினர் மே 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். அத்துடன் இலங்கை சார்பாகவும் 28 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்திய மத்திய அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்த கூட்டத்தை நடத்த நாம் ஒப்பு கொண்டுள்ளோம்.
இந்த போச்சு முன்னர் இருதடவைகள் தமிழ்நாட்டு அரசு முன்வைத்த நிபந்தனைகளை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.- என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment