Sunday, April 27, 2014
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நாட்டின் உண்மையான பொது வேட்பாளர் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மக்கள் முன் செல்ல முடியாத சில தோல்வியடைந்த அணியினர் மறைந்து கொண்டு பொது வேட்பாளர் பற்றி பேசினாலும், நாடும் பொதுவாக கோரும் நாட்டை வென்ற ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டுக்குள் ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சினையான பயங்கரவாதத்திற்கு ஜனாதிபதி தீர்வை வழங்கினார்.
அத்துடன் நாட்டுக்கு தேவையான உண்மையான பொது வேட்பாளரின் கடமைகளையும் பொறுப்புகளையும் கடந்த 10 வருடங்களாக நிறைவேற்றி தந்துள்ளார்.
இதனால் மக்களின் உண்மையான பொது வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment