Tuesday, April 1, 2014

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்!

Tuesday, April 01, 2014
புதுடெல்லி::இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல். 67 வயதான இவர், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இத்தகவலை தெரிவித்தார். ஜனாதிபதி ஒபாமாவிடம், ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டதாகவும், மே மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பப்போவதாகவும் அவர் கூறினார்.
இத்தகவல், அமெரிக்க தூதரக இணையதளத்தில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நான்சி பவல் மாற்றப்படுவார் என்று ஒரு வாரத்துக்கு முன்பே யூகங்கள் வெளியாகின. இந்நிலையில், அவர் பதவி விலகி உள்ளார். இந்தியாவில் தேர்தல் நேரமாக இருந்தபோதிலும், அவர் ராஜினாமா செய்துள்ளார்.
 
நான்சி பவல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கமானவராக கருதப்படுபவர். ஆனால், வருங்கால பிரதமராக கருதப்படும் நரேந்திர மோடியுடன் நேசக்கரம் நீட்ட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அரசின் வற்புறுத்தலால், கடந்த பிப்ரவரி 13ம் தேதி, நரேந்திர மோடியை நான்சி பவல் சந்தித்தார். இந்த சூழ்நிலையில், நான்சி பவல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
       

No comments:

Post a Comment