Sunday, April 27, 2014
புதுடெல்லி::நாட்டில் பாஜ அலை வீசுவது பிரதமர் மன்மோகன் சிங் கண்ணுக்கு தெரியாது. அவருக்கு தெரிவதெல்லாம் சோனியா, ராகுல் மட்டும் தான் என பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
புதுடெல்லி::நாட்டில் பாஜ அலை வீசுவது பிரதமர் மன்மோகன் சிங் கண்ணுக்கு தெரியாது. அவருக்கு தெரிவதெல்லாம் சோனியா, ராகுல் மட்டும் தான் என பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலில் வாக்களித்து விட்டு பேசும் போது, நாட்டில் மோடி அலை எதுவும் வீசுவதாக தெரியவில்லை. இவை அனைத்தும் ஊடகங்கள் உருவாக்கி விட்டவை என பேசினார்.இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் 3டி தொழில் நுட்பத்தின் மூலம் டெல்லியில் இருந்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக தாக்கினார். அப்போது அவர் பேசியது:
நாட்டில் பாஜ அலை வீசுவது அவரது கண்ணுக்கு தெரியவில்லை. உண்மைதான் உங்களது கண்களுக்குதான் எதுவுமே தெரியாதே. பணவீக்கம் உங்கள் கண்களுக்கு தெரியாது. உங்களது ஆட்சியில் ஏராளமான அமைச்சர்கள் சிறைக்கு சென்றது உங்கள் கண்களுக்கு தெரியாது. உங்கள் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்தது எதுவும் உங்கள் கண்களுக்கு தெரியாது. உங்களுடைய கண்களுக்கு சோனியா, ராகுல் மட்டுமே தெரிவர். அப்படி இருக்கும் போது நாடு முழுவதும் வீசி வரும் பாஜ அலை மட்டும் உங்கள் கண்களுக்கு எப்படி தெரியும்?
மீடியா ஆலோசகர் சஞ்சய் பாருவின் புத்தகத்தை படித்தபிறகுதான் தெரிகிறது
நீங்கள் ஒரு தற்செயலான பிரதமர் என்று. எனவே உங்களுக்கு சோனியா, ராகுலை தவிர வேறு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லைதான். பரவாயில்லை. இன்னும் 10, 15 தினங்களில் ஓய்வு பெற போகிறீர்கள். எனவே நீங்கள் அம்மா-மகன் புயலில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு கிடைத்து விடும். எனவே அதன்பிறகு சவுகரியமாக இருக்கலாம். கவலை வேண்டாம். ஆனால் பிரதமர் ஏன் இப்படி பேசுகிறார் என்று நமக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அரசை நடத்தியது அவர் அல்ல. சோனியாவும் ராகுலும் தானே.இவ்வாறு மோடி பேசினார்.

No comments:
Post a Comment