Tuesday, April 1, 2014

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு!

Tuesday, April 01, 2014
இலங்கை::புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி பொலிஸார் பொது மக்களிடம் கோரி வருகின்றனர்.

அரச விரோத துண்டுப்பிரசுரம் விநியோகம் தொடர்பில் கோபி மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்பி அதற்கு தலைமை வகிக்க கோபி உள்ளிட்ட குழுவினர் முனைவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment